வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தனியார் மயமாக்கத்தை கைவிடக்கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்
2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 16, 17-ந் தேதிகளில் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று மாலை உழவர்சந்தை அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளை முன்பு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.