ஆயுதப்பயிற்சி வழக்கில் தலைமறைவு: மாவோயிஸ்டு கைது

ஆயுதப்பயிற்சி வழக்கில் தலைமறைவு: மாவோயிஸ்டு கைது.

Update: 2021-12-05 18:53 GMT
தேனி,

தேனி மாவட்டம் வருசநாடு அருகே வனப்பகுதியில், கடந்த 2007-ம் ஆண்டு ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த யோகேஷ்மதன் (வயது 34) உள்ளிட்ட சில மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர்.இதில் யோகேஷ்மதன், கடந்த 2009-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து அவர் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதனால் அவரை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

இந்தநிலையில் அவர் மராட்டியத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து ‘கியூ’ பிரிவு போலீசார் மராட்டியத்துக்கு சென்று அங்கு பதுங்கியிருந்த யோகேஷ்மதனை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அவர் தேனி ‘கியூ' பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தேனி போலீசார், யோகேஷ்மதனை கைது செய்து தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்