காங்கேயம் அருகே நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்
காங்கேயம் அருகே நடிகர் சத்யராஜின் சகோதரி காலமானார்.
முத்தூர்,
காங்கிரசைச் சேர்ந்த தமிழக முன்னாள் அமைச்சர் மறைந்த நல்லதம்பி சர்க்கரை மன்றாடியாரின் மகன்அர்ஜூன் மன்றாடியார். இவர் காங்கேயம் தொகுதிமுன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ.வான ராஜ்குமாரின் உடன் பிறந்த தம்பியும் ஆவார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை அரண்மனை சீரப்பள்ளத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார். என்.அர்ஜுன் மன்றாடியார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி ஏ.கல்பனா மன்றாடியார் (வயது 66). இவர் நடிகர் சத்யராஜின் உடன் பிறந்த தங்கை ஆவார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனா சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.
மறைந்த என்.அர்ஜுன் மன்றாடியார் - ஏ.கல்பனா தம்பதிக்கு ஏ.மகேந்தர் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் சத்யராஜின் மகளான டாக்டர் திவ்யாவை திருமணம் செய்து உள்ளார். காலமான கல்பனாவின் இறுதிச்சடங்குகள் இன்று காலை 10 மணிக்கு பழையகோட்டை சீரப்பள்ளம் தோட்டத்தில் நடைபெற உள்ளது.