கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை..!

கோவையில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Update: 2021-12-04 14:46 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. மாநகர் பகுதியில் உள்ள அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் முழுவதுமாக ஏறக்குறைய 10 அடிக்கும் மேலாக தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாலத்திற்கு அடியில் பாய்ந்தோடிய வெள்ள நீர் ஒரு காரை அடித்துச் சென்றது. காரில் இருந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் காப்பாற்றி மீட்டெடுத்தர். ஆனால் காரை வெளிக்கொண்டுவர முடியவில்லை.  

தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் அந்தப் பகுதியில், உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து அந்த பகுதியில் உள்ள தண்ணீரை வடிய வைத்து அந்தப் பகுதியில், உள்ள கால்வாய்களை சுத்தம் செய்து காரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்