அடுத்த நிதியாண்டில் ரூ 3805 கோடி கடன் வழங்க திட்டம் வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவு

அடுத்த நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 805 கோடி கடன் வழங்க வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-12-03 18:30 GMT
புதுச்சேரி
அடுத்த நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 805 கோடி கடன் வழங்க வங்கியாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வங்கியாளர்கள் கூட்டம்

புதுவை மாநில வங்கியாளர்கள் கூட்டம்  நடந்தது. இந்தியன் வங்கியின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சாந்தி லால் ஜெயின் தலைமை தாங்கினார். கொரோனா காலகட்டத்திலும் வங்கிகள் சிறப்பாக செயல்பட்டு கடன் வழங்கி பொருளாதார வளர்ச்சிக்கு உதவியதை அவர் குறிப்பிட்டார். 
வங்கிகள் தகுதியான வாடிக்கையாளர்களை பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மண்டல மேலாளர் செந்தில்குமார் அறிக்கை சமர்ப்பித்தார்.

ரூ.3,805 கோடி கடன்

இந்த கூட்டத்தில் புதுவை அரசின் வளர்ச்சி ஆணையர் பிரசாந்த் கோயல், வீட்டு வசதித்துறை செயலாளர் விக்ராந்த் ராஜா, ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் எஸ்.எம்.என்.சாமி, துணை செயலாளர் சுர்ஜித் கார்த்திகேயன், நபார்டு வங்கியின் தலைமை பொதுமேலாளர் வெங்கடகிருஷ்ணா, பொதுமேலாளர் ராஜேஸ்வர ரெட்டி, இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் சூரிபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட மேலாளர் உதயகுமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் 2022-23 நிதியாண்டில் வழங்க வேண்டிய கடன் குறித்த திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அடுத்த நிதி ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 805 கோடி கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்