விசில் அடித்தால் விரைந்து வரும் வவ்வால்

விசில் அடித்தால் விரைந்து வரும் வவ்வாளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2021-12-02 18:34 GMT
புதுச்சேரி அருகே கன்னியக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தாமரை கிருஷ்ணன். கடலூர் சாலையில்  உள்ள இவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்க்கும் பழங்களை அணில்கள், வவ்வால்கள் சாப்பிட்டு செல்வதை கவனித்தார். சமீபத்தில் வீசிய பலத்த காற்றில் பழ மரங்கள் சாய்ந்தன. இதனால் அங்கு வந்த வவ்வால்கள் பழம் கிடைக்காமல் சுற்றித்திரிந்தன. இதைப் பார்த்த செந்தாமரை கிருஷ்ணன், அங்குள்ள சுவர் மற்றும் காரின் மீது வாழைப்பழங்களை வைத்தார். அதை வவ்வால்கள் சாப்பிட்டுச் சென்றன.
இந்தநிலையில் தனது கையில் வாழைப்பழத்தை வைத்து விசில் அடித்து வவ்வால்களின் கவனத்தை ஈர்த்தார். அதில் இருந்து விசில் சத்தம் கேட்டதும் பறந்து வரும் வவ்வால் அவரது கையில் வந்து அமர்ந்து பழத்தை   சாப்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது. ஒவ்வொரு வவ்வால்களும் இப்படி விசில் சத்தம் கேட்டதும் பறந்து வந்து பழத்தை சாப்பிட்டு செல்கின்றன. இப்படி ஒரு காட்சியை செந்தாமரைகிருஷ்ணனின் நண்பர் ஒருவர் செல்போனில் வீடியோவாக படம் எடுத்து,   அதை  வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ளார்.  தற்போது    அந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதைப்பார்த்து பலரும் வியந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்