ஆசிரியர் வீட்டில் புகுந்த பாம்பு
பாகூரில் ஆசிரியரின் வீட்டில் பாம்பு புகுந்து படமெடுத்து ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது
பாகூர் கூட்டுறவு நகர் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 54). அரசு பள்ளி ஆசிரியர். இந்தநிலையில் நேற்று மாலை இவரது வீட்டின் கார் நிறுத்தும் பகுதியில் நல்லப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பால்ராஜ் கூச்சல் போட்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து பாம்பு பிடிப்பவரான விக்கி என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர் பாம்பை லாவகமாக பிடித்து பாகூர் ஏரிக்கரையில் கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.