அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.;

Update: 2021-12-02 18:25 GMT
கரூர், 
கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகநத்தம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் பன்னீர்செல்வம் (வயது 48). இவர் பள்ளி மாணவ-மாணவிகளிடையே பாலியல் வன்மத்தை தூண்டும் வகையில் பாடம் நடத்துவதாக பல்வேறு புகார் வந்தது.
இதையடுத்து, தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் விசாரணை நடத்தி மாவட்ட கல்வி அலுவலரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் ஆசிரியர் பன்னீர்செல்வத்தை மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்