தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்வு

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.;

Update:2021-01-01 15:28 IST
சென்னை,

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் முதன்மை செயலாளர் அந்தஸ்துக்கு நிலை உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவர்து:-

பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம்:-

1. வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள கார்த்திகேயன் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.

2. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஸ்வர்ணா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.

3. டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 பதவி வகிக்கும் ஆசிஷ் வச்சானி முதன்மைச் செயலராக பதவி உயர்த்தப்பட்டு அதே பதவியில் தொடருகிறார்.

4. டான்ஜெட்கோ தலைவர் மற்றும் செயலர் பங்கஜ்குமார் பன்சார் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.

5. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹு முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார்.

6. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பயிற்சி) செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர் சஹய் மீனா முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.

7.வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள பீலா ராஜேஷ் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடருகிறார்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்