பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2020-12-21 05:58 GMT
சென்னை,

தமிழகத்தில் 2 கோடியே 6 லட்சம் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

பொங்கல் பரிசு ஆரம்ப கட்ட அறிவிப்பு தான், இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்க உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இந்நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*அரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

*ஒரு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

* பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்