வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-12-20 08:22 GMT
சென்னை, 

வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் மழை கொட்டுகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தின் வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. 

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

வட கிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும்.

இன்றும், நாளையும் கன்னியாகுமரி மற்றும் மாலத்தீவு கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். குமரி, மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்