சென்னையில் இன்று காலை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
சென்னை,
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்திற்கு மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் திமுக செயலாளர்/பொறுப்பாளர்கள் தவறாது கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.