தமிழகத்தில் 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னை,
தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,127 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில், ஆண்கள் 688 பேர் மற்றும் பெண்கள் 439 பேர் ஆவர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 777 ஆக உயர்வடைந்து உள்ளது.
இதேபோன்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களில் 1,202 பேர் குணமடைந்து அவர்களது
வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 84 ஆயிரத்து 117 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 14 பேர் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து உயிரிழந்து உள்ளனர். இவர்களில் தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 8 பேரும் அடங்குவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 962 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 692 ஆக குறைந்து உள்ளது. இந்த எண்ணிக்கை நேற்று வரை 9 ஆயிரத்து 781 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.