பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் - முதலமைச்சர் பழனிசாமி

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.;

Update: 2020-12-18 05:14 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் வாணியம்பாடியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் வீரபாண்டி அருகே அம்மா மினி கிளினிக் திட்டத்தை திறந்துவைத்த பின் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளது. அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசி வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது. 2 பேருக்கும் மக்கள் தான் வாரிசு. மக்களை சந்திப்பது பெரிதா? அல்லது வீட்டிலேயே உட்கார்ந்து பேசுவது பெரிதா? என்றார். 

மேலும் செய்திகள்