4 படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 28 பேர் சிறைபிடிப்பு

4 படகுகளுடன் ராமேசுவரம் மீனவர்கள் 28 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

Update: 2020-12-14 19:33 GMT
ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலையில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 5 ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் வந்தனர். இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்ததாக கூறி 4 விசைப்படகுகளையும், அதில் இருந்த 28 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் 28 பேரையும் கைது செய்து, இலங்கையின் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 4 படகுகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டன.

ராமேசுவரத்தை சேர்ந்த 28 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்