கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஐடி மாணவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-14 08:23 GMT
சென்னை,

சென்னை ஐஐடியில் 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. 

மேலும் சென்னை ஐஐடியில் படித்துவரும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்-லைன் வழியில் படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து துறைகளும் செயல்பட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் ஐஐடியில் மாணவர்களுக்கு கொரோனா பரவியுள்ளது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள ஐஐடி மாணவர்களுக்கு கிங் மருத்துவ மையத்தில் உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* சென்னை ஐஐடியில் இதுவரை 444 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி மாணவர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பரவியது நமக்கு பாடம். இதை ஒரு பாடமாக கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். சென்னை ஐஐடியில் நேற்றுவரை 71 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று 33 பேருக்கு உறுதியாகி உள்ளது.

மேலும் 33 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது. சென்னை ஐஐடி கேண்டீனில் உணவருந்தாமல் விடுதிக்கு எடுத்துச்சென்று சாப்பிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்திற்கு சென்று சுகாதாரத்துறை அமைச்சரும் நானும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்