பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டிசம்பர் 30 ஆம் தேதி தமிழகம் வருகை
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் டிசம்பர் 30 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.;
சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த போது, அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து வரும் டிசம்பர் 30 ஆம் தேதி பாஜக தேதிய தலைவர் ஜே.பி.நட்டா, 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக தலைவர்கள் கூறுகையில், ஜே.பி.நட்டா தமிழகத்திற்கு வரும் போது, தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.