ரஜினிகாந்த் பிறந்த நாள் - நள்ளிரவில் அவர் வீட்டின் முன் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!
ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.;
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 71–வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதனால், டுவிட்டரில் #HappyBirthdayRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.
ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் பலர், நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் காரணமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள உள்ளனர்.
ரஜினிகாந்த் பிறந்த நாள் - நள்ளிரவில் அவர் வீட்டின் முன் கேக் வெட்டி கொண்டாடிய ரசிகர்கள்!#HBDRajiniKanth | #HBDRajini | #Rajinikanth | #Birthdayhttps://t.co/y1ZMvalXEU
— Thanthi TV (@ThanthiTV) December 11, 2020