மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-12-10 07:57 GMT
சென்னை,

உலகம் முழுவதும் இன்று மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் நாள் ஒன்றுகூடிய ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 

அதனை தொடர்ந்து ஐ.நா. பொதுச்சபை நாடுகளுக்கும், தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக மனித உரிமைகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனித உரிமைகளை போற்றிப் பாதுகாக்கும் சிந்தனை அனைவருக்கும் மேலோங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சத்தியவாணி நகர் மனிதர்கள் கூவத்தில் நிற்கிறார்கள் என்றும், பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதற்கு பெயர் தான் நலத்திட்டமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்? என்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்