“விவசாயிகளின் போராட்டத்தில் ம.தி.மு.க பங்கேற்கும்” - வைகோ அறிவிப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டுல் மதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-06 09:26 GMT
சென்னை,

மத்திய அரசு அறிமுகப்படுத்திய 3 வேளாண் சட்டங்களுகு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வரும் 8 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில் அம்பேத்கரின் 64-வது நினைவு நாளான இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அப்போது அவர் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை மத்திய குழு முழுமையாக ஆய்வு செய்து, உரிய நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது என்று கூறிய அவர், வரும் டிசம்பர் 8 ஆம் தேதி விவசாயிகள் நடத்தும் தேசிய அளவிலான போராட்டத்தில் மதிமுக பங்கேற்கும் என்று தெரிவித்தார். 

மேலும் செய்திகள்