பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.;

Update: 2020-12-05 16:27 GMT
சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான இறுதியாண்டு இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வுகள் துவங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான அட்டவணை இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்