பணியின் போது மின்சாரம் தாக்கி மின்சார ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
பணியின் போது மின்சாரம் தாக்கி ன்சார ஊழியர் உள்பட 2 பேர் உயிர் இழந்தனர்.;
சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம் அடுத்த அரக்கோணம் சாலை ஈஞ்சம்பாக்கத்தில் மின்வாரிய பணியின் போது விபத்து ஏற்பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன் மற்றும் ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த தயாளன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.