பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு 6,073 கனஅடியாக அதிகரிப்பு

பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு 6,073 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-12-04 16:49 GMT
சென்னை,

புரெவி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கியமான நீர் நிலைகள், ஏரி மற்றும் குளங்கள் நிரம்பின. இதனால் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் பாதுகாப்பு கருதி திறந்து விடப்பட்டு வருகிறது. 

அந்த வகையில்  திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 4,355 கனஅடியில் இருந்து 6,073 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3373 கனஅடியாக உள்ளதால் நீர் வெளியேற்றப்படுவதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஏரியின் மொத்த கொள்ளளவான 3231 மி.கன அடியில் 2883 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

மேலும் செய்திகள்