நாகர்கோவில்-கோவைக்கு காலை நேர சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

நாகர்கோவில்-கோவைக்கு காலை நேர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2020-12-03 21:50 GMT
சென்னை, 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-நியூ ஜல்பைகுரி (வண்டி எண்: 02611) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10.45 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக நியூ ஜல்பைகுரி-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02612) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 18-ந்தேதி இரவு 9.15 மணிக்கு நியூ ஜல்பைகுரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* நாகர்கோவில்-கோவை (06321) இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரெயில் வருகிற 16-ந்தேதி முதல் காலை 7.35 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்தும், மறுமார்க்கமாக கோவை-நாகர்கோவில் (06322) இடையே இயக்கப்படும் தினசரி சிறப்பு ரெயில் வருகிற 17-ந்தேதி முதல் காலை 7.25 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்