சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில்

சென்னையில் இருந்து காரைக்கால், திருச்செந்தூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Update: 2020-11-30 19:25 GMT
சென்னை,

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06105), சென்னையில் இருந்து வரும் 4-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். இதைப்போல் திருச்செந்தூர்-சென்னை சிறப்பு ரெயில் (06106), திருச்செந்தூரில் இருந்து வரும் 5-ந்தேதி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை வந்தடையும்.

* சென்னை எழும்பூர்-காரைக்கால் சிறப்பு ரெயில்(06175), வரும் 4-ந்தேதி இரவு 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.50 மணிக்கு காரைக்கால் சென்றடையும். இதைப்போல் காரைக்கால்-சென்னை சிறப்பு ரெயில்(06176), வரும் 5-ந்தேதி இரவு 9.20 மணிக்கு காரைக்காலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 4.55 மணிக்கு சென்னை வந்தடையும்.

* மதுரை-புனலூர் டெய்லி மெயில் எக்ஸ்பிரஸ்(06729), மதுரையில் இருந்து வரும் 4-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூர் சென்றடையும். இதைப்போல் புனலூர்-மதுரை டெய்லி மெயில் எக்ஸ்பிரஸ்(06730), வரும் 5-ந்தேதி மாலை 5.20 மணிக்கு புனலூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.20 மணிக்கு மதுரை வந்தடையும்.

மேலும் விழாக்காலங்களை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து கர்நாடகா மற்றும் ஒடிசா வழியாக செல்லும் 30 சிறப்பு ரெயில்களின் பயண காலங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்