நாளையே மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்; மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி
நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இந்த நிலையில், மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் நாளையே சேர வேண்டும் என்ற மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவிக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.