"பருவமழை தீவிரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் பருவமழை தீவரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-17 05:53 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக 4,133 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

* அதிக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளாக 297 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

* கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.

* சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* 36 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு மற்றும் அறிவுரைகளை வழங்க அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இயல்பு நிலையை விட 40 சதவீதம் குறைவாக வடகிழக்கு பருவமழை இதுவரை பெய்துள்ளது.

* தொடர்மழையால் ஏரிகள் நிரம்பினால் உபரிநீரை வெளியேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்

மேலும் செய்திகள்