தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால். கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்யும். தூத்துக்குடி துறைமுகப்பகுதியில் தற்போது வரை 16 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.