சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் - விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் பொறுப்பேற்றார்

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Update: 2020-11-16 11:59 GMT
சென்னை,

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சூரப்பா, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்கு, ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசனை நியமித்து தமிழக அரசு நேற்று முன் தினம் உத்தரவிட்டது.  மேலும் விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

சூரப்பா மீதான குற்றச்சாட்டு குறித்த ஆவணங்கள் அனைத்தும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அலுவலகம் அமைக்கப்பட்டதும் ஓரிரு நாளில் விசாரணை தொடங்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

நான் எந்த விதியையும் மீறவில்லை என்றும், ஒரு பைசா கூட லஞ்சமாக வாங்கியது கிடையாது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்