சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Update: 2020-11-12 04:57 GMT
சென்னை

சென்னையில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மயிலாப்பூர், சாந்தோம், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்துள்ளது

அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்