ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் கட்டண சலுகை - தெற்கு ரெயில்வே தகவல்

ராஜ்தானி, சதாப்தி ரெயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-11 18:48 GMT
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்திய ரெயில்வேயின் அதிவேக ரெயில்களாக கருதப்படும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் ரெயில்வே வாரியத்தின் முடிவை தொடர்ந்து கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ரெயில்களில் 60 சதவீதம் இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால், 20 சதவீதம் தள்ளுபடியும், 70 முதல் 80 சதவீதம் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தால் 10 சதவீதம் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடிகள் பயண தேதிக்கு 4 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு செய்யப்பட்டுள்ள டிக்கெட்டுகளின் எண்ணிக்கைகளை பொறுத்து நடைமுறையில் வரும். இந்த தள்ளுபடி வரும் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்