எனக்கு விவசாயம் தெரியும்; ஸ்டாலினுக்கு என்ன தெரியும்? முதல்வர் பழனிசாமி விமர்சனம்

நான் விவசாயம் எனும் தொழில் செய்கிறேன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது என்று முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Update: 2020-11-11 07:44 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, போலி விவசாயி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ எனக்கு விவசாயம் தெரியும், ஸ்டாலினுக்கு என்ன தெரியும். 

விவசாயி என்ற சான்றிதழை அவர் எனக்குத் தர தேவையில்லை. நான் விவசாயம் எனும் தொழில் செய்கிறேன், மு.க.ஸ்டாலினுக்கு என்ன தொழில் இருக்கிறது. முதலமைச்சராக இருக்கும் போதும் கூட விவசாயத்தைத் தொடர்ந்து வருகிறேன். நான் சிறுவயது முதலே எவ்வளவு கடின உழைப்பாளி என்பது என் ஊர் மக்களைக் கேட்டால் தெரியும்” என்றார்.

மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “ தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் உள்ளன.  சுமார் 2.24 லட்சம் பேரிடம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. பள்ளிகளை தற்போது திறந்தால் கொரோனா பரவும் என சிலர் அச்சம் தெரிவித்தனர். பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பில் முடிவு எடுக்கப்படும்.  ஒரே வருடத்தில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றோம்” என்றார்.

மேலும் செய்திகள்