திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது.
சென்னை,
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பியதாக சித்த மருத்துவர் திருத்தணிகாசலத்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் அவர் மீது கொடுக்கப்பட்ட புதிய புகார்களின் அடிப்படையில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.திருத்தணிகாசலம் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா மருந்து, முதலமைச்சர் குறித்து வீடியோ வெளியிட்டதால் திருத்தணிகாசலம் மே மாதம் கைது செய்யப்பட்டார்.