நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல்: கமல்ஹாசனுக்கு, ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து
நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல் என்று கமல்ஹாசனுக்கு, ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இதையொட்டி அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நவீன தமிழ் கலாசாரத்திற்கு பங்களித்த வலுவான குரல் என்று கமல்ஹாசனுக்கு, காங்கிரஸ் எம்.பியான ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நவீன தமிழ் கலாச்சாரத்திற்கு பங்களித்த வலுவான குரல். கமல்ஹாசன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
A very happy birthday to Thiru @ikamalhaasan. A strong voice that has contributed to modern Tamil culture.
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020