தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-11-06 07:55 GMT
சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில்,  குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்  கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர், நெல்லை, குமரி  உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்