சட்டசபை தேர்தலில் போட்டி: "சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும்" - கமல்ஹாசன் பேட்டி
நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் கமல்ஹாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் முதலமைச்சர் வேட்பாளராக என்னை நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். பாஜக வேல் யாத்திரையை ரத்து செய்தது நல்லதே. வேலை வாங்கிகொடுப்பதே எனது வேலையாக இருக்கும். நான் பி டீமாக இருந்தது இல்லை.
புழகத்தில் இல்லாத மனுஸ்மிருதி புத்தகத்தை பற்றி இப்போது பேச தேவையில்லை.
சட்டசபை தேர்தலில் ரஜினியின் ஆதரவை கேட்போம். ரஜினிக்கு அவரது உடல்நலன் தான் முக்கியம். அரசியல் பிரவேசம் பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
பழி போடும், பழிவாங்கும் அரசியல் அல்ல எங்களுடையது; வழிகாட்டும் அரசியல். நேர்மை ஒன்றே மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வியூகம். ஊழலை அகற்ற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
நல்லவர்களுடன் தான் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைக்கும். நல்லவர்கள் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான 3வது கூட்டணி அமைந்துவிட்டது.
நான் எங்கு போட்டியிடுவேன் என்பது தேர்தல் நேரத்தில் தெரிய வரும் சட்டமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் கண்டிப்பாக ஒலிக்கும். எனது அரசியலமைப்பு சட்டத்தில் கை வைத்தால் நடப்பதே வேறு.
இவ்வாறு அவர் கூறினார்.