தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது - மு.க.ஸ்டாலின்

தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2020-11-02 15:19 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் 'தமிழகத்தில் மீட்போம்' என்ற தலைப்பில் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் 600 இடங்களில் அக்கட்சியைச் சேர்ந்தவர்களும் பொதுமக்களும் பொதுக்கூட்டத்தைக் கண்டு ரசித்தனர். இக்கூட்டத்தில் சென்னையிலிருந்து காணொலி மூலம்  திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொய் கணக்கை காட்டி வருகின்றனர் . கொரோனா பயத்தை வைத்து படம் காட்டி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். 

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை. மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்கள். இந்த குழுவில் மதுரையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அதைவிட்டு விட்டு சர்ச்சைக்கு உள்ளான ஆர்எஸ்எஸ் நபரை இந்த குழுவில் நியமனம் செய்திருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மேலும் செய்திகள்