“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக மாவட்ட வாரியாக பங்கேற்கும் ‘தமிழகம் மீட்போம்!’ என்ற தலைப்பில், முதல்கட்ட 2021-சட்டமன்ற தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டங்கள் குறித்த விவரங்களை திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.