2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவிப்பு
2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,
ஆண்டின் இறுதி மாதங்களில் அடுத்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை அரசு வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில் 2021ம் ஆண்டில் 23 நாள்கள் அரசு விடுமுறை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தும். மேலும் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அரசு ஊழியர்களுக்கும் விடுமுறை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.