தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.

Update: 2020-10-22 07:31 GMT
மதுரை,

தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு, பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

முன்னதாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்காக டெண்டர் விடும் பணி நடைபெற்றது. 9 பணிகளுக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், 4 பணிகளுக்கு பணி ஆணை பெறாமல் வேலை நடக்கிறது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக்.28ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. 

மேலும் செய்திகள்