அக்டோபர் 1 முதல் தற்போது வரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பு - அமைச்சர் காமராஜ்

அக்டோபர் 1 முதல் தற்போது வரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

Update: 2020-10-20 10:29 GMT
சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று செய்தியாளார்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் குறித்த விவரங்களை வெளியிட்டார். கடந்த அக்டோபர் 1 முதல் தற்போது வரை 842 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் 60 லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 6 லட்சம் விவசாயிகள் பலன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.

நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்த அவர், நெல் ஈரப்பத அளவு குறித்து ஆய்வு செய்ய விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் தமிழகம் வர உள்ளதாக தெரிவித்தார். ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருக்கக்கூடாது என்றும் ஈரப்பதம் இருந்தாலும் உடனே நெல் கொள்முதல் செய்யப்பட்டு அரவைக்கு அனுப்பப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்