அமமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து கவலைக்கிடம்

வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், கடந்த 6-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிவேல் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2020-10-14 08:50 GMT
சென்னை,

அமமுக பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெற்றிவேல், சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதால், கடந்த 6-ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதால், கடந்த 9-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியூ) மாற்றப்பட்டார். வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) உள்ள அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். எனினும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் நிலை   தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்