மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-14 07:13 GMT
சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 9-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதற்கு அடுத்தநாள் (10-ந்தேதி) தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்து, தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்