தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - கி.வீரமணி அறிக்கை

இரும்பு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-14 01:54 GMT
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணி பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி போன்று கொள்கையற்ற கூட்டணி அல்ல. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு கொள்கை குழப்பம் எதுவும் கிடையாது. இந்த கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை தாங்கும் கட்சி. தி.மு.க. தலைவர் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்.

வீண் கற்பனைகள் மூலம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை கலைக்கலாம் அல்லது கலகலக்க வைக்கலாம் என்று யாரும் அற்பக்கனவு காண வேண்டாம். இரும்பு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை.

தி.மு.க. கூட்டணியை அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. 2019 நாடாளுமன்ற தேர்தலை போன்று வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்