தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி
தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு திடீர் மூச்சு திணறலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
விழுப்புரம்,
தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமான செய்தியறிந்து, நேரில் சென்று நலம் விசாரிப்பதற்காக தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
திண்டிவனம் அருகே சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 10 மணி அளவில் அமைச்சர் துரைக்கண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. உடனே அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதன்பின்னர், நெஞ்சு வலியில் இருந்து விடுபட்ட அமைச்சர் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.