ராசிபுரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: முதியவர் உட்பட 7 பேர் போக்சோ சட்டத்தில் கைது

2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Update: 2020-10-12 10:11 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் 2 சிறுமிகளை 75 வயது முதியவர் உட்பட 7 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து 75 வயது முதியவர் உட்பட 7 பேரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும்  சிறுமிகள் இருவரையும் 7 பேர் 6 மாதகாலமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்