"அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறது பாஜக" பாஜக துணைத்தலைவர் தகவல்
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் தெரிவிக்காத நிலையில் வி.பி.துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக - பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.