தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் இன்று மேலும் 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,56,385 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 65 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,252 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இன்று 1,250 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,82,014 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை தொடர்ந்து அதிகபட்சமாக கோவையில் 389 பேர், சேலத்தில் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் 158 பேர், திருவள்ளூர் 198 பேர், செங்கல்பட்டு 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 5,005 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,02,038 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 44,095 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 90,107 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 83,22,832 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.