ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லையா? வாடிக்கையாளர்களுக்கு வங்கி இழப்பீடு ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

Update: 2020-10-10 23:25 GMT
சென்னை, 

வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது தற்போது அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட பணம், ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வராமல் இருக்கலாம், ஆனால் வங்கி கணக்கில் தொகை பிடித்தம் செய்திருப்பதாக குறுஞ்செய்தி வருவது வழக்கம். அவ்வாறு வராத தொகையை, குறிப்பிட்ட அவகாசத்திற்குள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு வங்கிகள் வரவு வைக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நடைபெறுவதில்லை. கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால், ‘ஏ.டி.எம். பரிவர்த்தனை வெற்றியடையாமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு வைக்கவில்லையெனில், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்’ என இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. இதன்படி குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு வைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், நூறு ரூபாய் இழப்பீடாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளது.

மேற்கண்ட தகவலை வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்