தேர்தலில் தங்கள் சின்னத்தில் போட்டியிடப்போவதாக திமுக கூட்டணி கட்சிகள் மதிமுக- இந்திய யூனியன் முஸ்லீம் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் சின்னத்தில் போட்டியிடப்போவதாக திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகள் அறிவித்து உள்ளன.

Update: 2020-10-10 08:45 GMT
சென்னை

சென்னை எழும்பூரில் மதிமுக தலைமையகமான தாயகத்தில்  வைகோ தலைமையில் மதிமுகவின் சூளுரை நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் உயிர்த்தியாகம் செய்த 5 பேரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மத்திய அரசு மாநில மொழிகளை, தனித்தன்மையை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மூர்க்கத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருப்பதாகக் கூறிய வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலில் தனி சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்றும் திமுக தனிப்பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்து ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி என்றும் வரும் தேர்தல் அதிமுகவிற்கு மரண அடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

இது போல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அபுபக்கர் எம்.எல்.ஏ '2021 சட்டமன்ற தேர்தலில் ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு பொருந்தாது என  கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்